முல்லையில் இந்திய மீனவர்கள் கைது!முல்லைதீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் நாகைபட்டினத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகில் பயணித்த 9 மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை திராவிட முன்னேற்ற கழக தொழிற்சங்க தலைவரும் சட்டத்தரணியுமான கரூர் எம்.கண்ணதாசன் இலங்கை-இந்திய மீனவர்களிடையே பிரச்சினைகளை தொடராமல் செய்வதற்கான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments