எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு - சபாநாயகர்


இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) பாராளுமன்றத்தை கூட்டி, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் இருப்பதாக சபைக்கு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் தேதி கோரப்படும். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 20 ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

புதிய ஜனாதிபதியின் கீழ் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

No comments