ஜனாதிபதியின் கொடியை திருடி படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது!


ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் அணைக்கட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதியின் கொடியை அந்த நபர் படுக்கை விரிப்பாக பயன்படுத்திய காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்டவர் சமகி சேவக சங்கமயவின் முன்னாள் உப தலைவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் வாக்குமூலத்தை அடுத்து ஜனாதிபதியின் கொடியை காவல்துறையினர் மீட்டெடுக்க உள்ளனர்.

அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments