காட்டு யானைத் தாக்கியதில் படைச்சிப்பாய் பலி!


இலங்கையில் அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் இராணுவக் குழுவொன்று நேற்று வியாழக்கிழம பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காட்டு யானை தாக்கி படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மதுருஓயா இராணுவ சிறப்புப் படைப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வந்த 19 வயதுடைய சிப்பாய் எனக் காவல்துறையினா தெரிவித்தனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பகஸ்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

அரலகங்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments