தொடர்ந்து தாய் நாட்டுக்காக சேவையாற்றுவேன் - கோட்டாபாய


ஜனாதிபதி பதவிலிருந்து பதவி விலகிய பின்னர் தொடர்ந்தும் தாய் நாட்டுக்காக சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வாசிக்கப்பட்ட அவரது பதவி விலகல் கடிதத்திலேயே  அவர் இதனைக்  குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபாயவினால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதம் , இன்று நாடாளுமன்றில்  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.

அந்தக் கடிதத்தில், நான் ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கொவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்தது.

அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை அமுல்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாகவும் தனது பதவிவிலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையற்ற பொருளாதார தன்மைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அனைத்துக் கட்சிகளுக்கும் பாராளுமன்றில் நான் அழைப்பு விடுத்தேன்.

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முழுமையாக நான் முயற்சி எடுத்தேன் என்பதை நம்புக்கின்றேன் என அவர் மேலும் தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments