இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற இரு குடும்பங்கள்


இலங்கையிலிருந்து இரு குடும்பங்கள் தமிழகம்  தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்று தஞ்சமடைந்துள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணியளவில் தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள முதலாவது மணல் திட்டில் இலங்கையை சேர்ந்த அகதிகள் 7 பேர் தவிப்பதை இந்திய கடலோர காவல் படை  அவதானித்தனர்.

தொடர்ந்து அங்கு சென்று 3 குழந்தைகள் உள்ளிட்ட 7 அகதிகளை மீட்டு, கப்பலில் ஏற்றி அவர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து நேற்று இரவு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் இலங்கை வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 40), இவருடைய மனைவி ராஜகுமாரி (36) மகன்கள் குமரன் (13), வசி (10) மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமரன் (வயது 38), இவருடைய மனைவி மதினி (வயது 30), மகன் பவின் (6) என்பதும் தெரியவந்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் தமிழகத்திற்கு 104 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்.

No comments