டீசல் அடிக்க ஆமி வேண்டுமாம்!



எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அபாய நிலை ஏற்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 டீசல் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் டீசல் விநியோகம் தொடங்கும்.ஆனால் கூப்பன்களை விநியோகிக்க இராணுவம் இல்லை.

கடந்த காலங்களில் இராணுவத்தினர் கூப்பன்கனை வழங்கி வந்த நிலையில்,தற்போது எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் கடமைகளில் இல்லை.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளனர்.

,கடந்த நாட்களை போல இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடாவிட்டால் எரிவாயு நிலையங்களில் பாரிய பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments