ஜனாதிபதி தேர்வுக்கு நால்வர் போட்டி!!


இலங்கையில் ஜனாதிபதி பதவி விலகியதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு புதிய இடைக்கால ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்வில் நால்வர் போட்டியிடவுள்ளனர்.

தற்போது பதில் ஜனாதிபதியாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, சிறீலங்கா பொதுசன பெரமுன கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகபெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடப் போகின்றனர்.

எதிர்வரும் 20 திகதி நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பதில் ஜனாதிபதியக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜனபெரமுன ஜனாதிபதி தெரிவின் போது வாக்களிக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளோம் என்று நேற்று அறிவித்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கதது.

No comments