வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம்


புதிய இடைக்கால ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி தீர்மானத்தினை அறிவிக்கும் என்று அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேநேரம் ஜனநாயக ரீதியில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டே தாம் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ என்பன அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தில் தாம் இணைந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

ளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் நாம் அரசாங்கத்தின் பங்காளிகளாகச் செயற்படப்போவதில்லை. இருப்பினும் நாட்டின் ஸ்திரத்தன்மையொன்று ஏற்படுவதற்காக தமிழ் மக்களின் அபிலாஷைகளை மீறாத வகையில் எமது ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, ரெலோ அமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேந்திரனும், தமது தரப்பும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளாது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, ரெலோ அமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேந்திரனும், தமது தரப்பும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், அமையப்பெறுகின்ற அரசாங்கமானது நாட்டின் ஸ்திரமான அரசியல் நிலைமைகளை ஏற்படுத்துவதோடு,  பொருளாதார நெருக்கடிகளை போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறிப்பாக,  இந்த நெருக்கடிகளின் மூலவேராகவுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments