காலிமுகத்திடல் பண்டாரநாயக்க சிலையைச் சுற்று எவரும் நுழையத் தடை விதித்தது நீதிமன்றம்


கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் எவரும் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (20) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் அங்குள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது.

சிலைக்கு சேதம் விளைவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கோட்டை காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments