பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக்குவோம் - கிறிஸ்டலினா ஜோர்ஜீவா


இலங்கையை நெருக்கடிக்குள் இருந்து மீட்கும் பேச்சுக்களை முடிந்தளவுக்கு மிக விரைவாக முடிக்க சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

இன்று புதன்கிழமை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரம் முன் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

டோக்கியோவில் நிக்கி ஆசியா (Nikkei Asia) உடன் பேசிய கிறிஸ்டலினா ஜோர்ஜீவா  இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வில் சர்வதேச நாணய நிதியம் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்றார்.

இலங்கையின் வெளிநாட்டு நாயணத்தின் கையிருப்பு இல்லாதால்  எரிபொருள், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

No comments