பெரமுனவின் பிடியில் நாடாளுமன்றம்: நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் - சுமந்திரன்


இலங்கைப் நாடாளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் தான் இருக்கிறது. அதனை கலைக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரிலேயே இத்தகவலைப் பதிவிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மக்கள் ஆணையை இழந்த பொதுஜன பெரமுனவின் பிடியில் தான் நாடாளுமன்றம் இருக்கிறது. இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும்.

டலஸிற்கு வெளிப்படையாக ஆதரவை வெளியிட்டவர்களின் எண்ணிக்கை 113வை விட அதிகம். ஆனால் அவர்களிற்கு என்ன நடந்தது என ஜேவிபியின் தலைவர் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments