புதிய அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - மகிந்த ராஜபக்ச


இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பதை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதிக்கான தேர்தலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி வேட்பாளராகப் பரிந்துரைக்கட்டவர் டலஸ் அழகப்பெரும. எங்கள் வேட்பாளர் போட்டியில் தோல்வியடைந்துவிட்டார். நாம் அவருக்கு வாக்களித்தோம் இருந்து அவர் தோற்றுவிட்டார் என  மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பதை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments