இலங்கைக்குக் கடத்தவிருந்த வலி நிவாரண மாத்திரகள் மீட்பு!


தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரண மாத்திரைகளை தமிழக க்யூ காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம்   திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண மாத்திரைகள் கடத்தப்படவுள்ளதாக  க்யூ காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து  க்யூ பிரிவு காவல்துறையினர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த பதிவெண் இல்லாமல் சந்தேகத்திற்கு இடமான முறையில் தரித்து நின்ற நாட்டு படகினை  சோதனை செய்தனர்.  

அதில்  இலங்கைக்கு கடத்துவதற்காக சுமார் 443 அட்டைகளில் 4430 வலி நிவாரண மாத்திரைகள் மீட்கப்பட்டன. 

க்யூ பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் மற்றும்  நாட்டுபடகு என்பவற்றை சுங்கத்துறை அதிகாரிகளடம்  ஒப்படைத்தனர்.  

No comments