ஜனாதிபதியின் ஆலோசகராக ருவன் விஜேவர்தன நியமனம்!


காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) விடுத்துள்ள அறிக்கையில், “2016 இல், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டது. தற்போது, ​​உலகெங்கிலும் உள்ள பலரது கவனம், பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த உலகளாவிய பொறுப்புக்கு இலங்கைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.

உலகளாவிய பசுமைக்குடில் வாயு மற்றும் கரியமில வாயுக்களை குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அமுல்படுத்துதல், பசுமை பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற பல துறைகளை உள்ளடக்கி நடைமுறைப்படுத்த வேண்டிய பல திட்டங்களுக்கு ஆலோசனைகளையும் ஆதரவையும் பெறுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments