அமைதியான, ஜனநாயக மாற்றுத்திற்கு ஒத்துழைக்கவும் - ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு


இலங்கையில் அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்க கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் தெரிவிக்கையில்:-

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண வழிவகை செய்து இயல்பு நிலைக்கு திரும்புவது அனைத்து கட்சி தலைவர்களின் பொறுப்பாகும்.

இலங்கையின் மக்களுக்கான ஆதரவை மேலும் அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் தெரிவுகளை மதிப்பீடு செய்து வருவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments