ஏழைகளின் அழுகையையும் தேவைகளையும் புறக்கணிக்காதீர்கள் - பாப்பாண்டவர் இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள்


ஏழைகளின் அழுகையையும் மக்களின் தேவைகளையும் புறக்கணிக்காதீர்கள் என்று இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் பாப்பாண்டவர் பிரான்சிஸ்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் புனித பீட்டர் சதுகத்திலிருந்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதிப்புகளை தொடர்ந்து அனுபவித்து வரும் இலங்கை மக்களின் துக்கத்திற்காக நான் என்னை ஒன்றிணைக்கிறேன் என்றார்.

நாட்டின் ஆயருடன் இணைந்து, சமாதானத்திற்கான தனது வேண்டுகோளை புதுப்பிப்பதாகக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏழைகளின் அழுகையையும் மக்களின் தேவைகளையும் புறக்கணிக்க வேண்டாம் என்று இலங்கையின் தலைவர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments