பின்னப்படும் சதிகள்


நேற்றிரவு பாராளுமன்றத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு இராணுவத்தினரை கொடூரமான முறையில் தாக்கியதாகவும், அவர்களிடம் இருந்து இரண்டு தானியங்கி T-56 தாக்குதல் துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளுடன் எடுத்துச் சென்றதாகவும் சிறிலங்கா இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற சுற்றுவட்டத்திலும் அதைச் சுற்றியும் வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் இரண்டு இராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு அவர்களது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் திருடப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

இந்த திருடப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி வன்முறைகள் பரவக்கூடும் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது குறைந்தது 16 இராணுவத்தினர் காயமடைந்து இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்களுக்கு நாட்டில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments