அடுத்த சில நாட்களுக்குள் 20 தொடக்கம் 25 பேர் கொண்ட அமைச்சரவை


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் பணியாற்றுவதற்கு 20-25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் இதனை வெளிப்படுத்தினார்.

நிறைய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியில் இருந்து எந்தத் தலைவரும் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என்றால், இரகசிய வாக்கெடுப்பில் திரு.விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு அது வழங்கப்படும்.

அரசியலமைப்பின் படி, அமைச்சரவையின் அளவு 30 ஐ தாண்டக்கூடாது.

No comments