பஸில், நாமல் மீண்டும் அமைச்சர்களாக?தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதன் காரணமாக வெற்றிடமாக உள்ள பதவிக்கு பசில் ராஜபக்ச மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே  புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை இணைத்துக் கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இளைஞர் விவகார அமைச்சர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவும், வர்த்தக அமைச்சர் பதவிக்கு திரு.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments