கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்திவந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் இராணுவத்தினரால் இன்றிரவு  விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு இராணுவத்தினர் நுழைந்ததுடன் அப்பகுதியை படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் சட்டதரணி ஒருவர் உட்பட 10 பேர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் காயமடைந்தபோதும் அவர்களை மருத்துவமனைக்கு செல்லவிடாது படையினர் தடுத்துள்ளனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்கள் மற்றும் கட்டமைப்புகளை பாதுகாப்பு படையினர் அகற்றியுள்ளனர்.

No comments