அதிகளவிலான ஊசிக் கணவாய் பிடிபடுவதால் மகிழ்ச்சியில் மன்னார் மீனவர்கள்


அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஊசிக்கணவாய் (டியூப் கணவாய்) மீன்களின் சீசன் தொடங்கியதால் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்ற நிலையில் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் ஊசிக் கணவாய்கள் சிக்கியன.

தற்போது ஒரு கிலோ ரூ.200 முதல் ரூபாய் 250 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில்  வியாபாரிகள் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

No comments