தொடருந்து விபத்தில் கர்ப்பிணித் தாய் மகள் பலி!


காலி காலி மாகல்ல கங்காராம வீதி புகையிரத கடவையில் இன்று திங்கட்கிழமை காலையில் மகிழுந்தும் தொடருந்தும் மோதியதில் கர்ப்பிணத் தாய் அவரது 10 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மகிழுந்தில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருரே கும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மகிழுந்தில் திருமண நிகழ்வுக்கு சென்றுகொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரஜரட்ட ரகிண விரைவுத் தொடருந்து வரும்போது வண்ண ஒளி சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலியைப் பொருட்படுத்தாமல் தொடருந்துக் கடவையின் ஊடாக மகிழுந்து ஓட்டுநர் செலுத்த முற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது என காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments