பிள்ளையான் கும்பலும் கவனிக்கிறதாம்!தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உயர்மட்ட குழுவினர் நேற்றைய தினம் மாலை கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடி ஆராய்ந்ததாக பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் என்பவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துப்படுத்தும் கட்சிகள் வரிசையில் ஒரு ஆசனத்தைக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் இடம் பெறுகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் ஒரு சில தினங்களில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் அவற்றின் உறுப்பினர்களும் கூடி எடுக்கப் போகின்ற தீர்மானமானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டின் அதிகார மையங்களான பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளின் தேர்வுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளை பங்காளிக்கட்சிகள்; அவதானிக்கின்றன.

இந்நிலையில் பங்காளிக்கட்சிகள் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் கவனத்தை செலுத்திவருகின்றன.


No comments