பிரதமர் பதவிக்கான பொதுவேட்பாளார் சஜித்?


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிறப்பு கூட்டமொன்று இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற அலுவல் குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் பதவிக்கான வேட்புமனுக்கள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் எட்டியுள்ள ஒருமித்த கருத்து குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.

அத்துடன் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன் தமது வேட்புமனு தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அந்தக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments