டெஸ்லாவைப் பின்னுக்குத் தள்ளி உலக ஆதிகத்தைப் பிடித்த சீன கார் நிறுவனமான பிவைடி


உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு சூடுபிடித்து வரும் நிலையில் இத்துறையில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆதிக்கத்தை விற்பனையில் பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனத் தயாரிப்பு நிறுத்தின் BYD கார் நிறுவனம்.

அமெரிக்கப் பில்லியனரான வாரன் பபெட்டின் Berkshire Hathaway நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் சீன ஆட்டோமொபைல் நிறுவனமான BYD வேகமாக வளர்ந்து வரும் சீன எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் மட்டும் அல்லாமல் உலகளவிலான விற்பனையில் டெஸ்லாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

னாவின் ஷென்சென் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் BYD 2022ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 6,41,000 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைக் காட்டிலும் 300 சதவீதம் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் டெஸ்லா நிறுவனம் உலகளவில் சுமார் 5,64,000 கார்களை விற்பனை செய்துள்ளது, சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் விற்பனையும் சரிந்துள்ளது.

BYD மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே ரினியூவபிள் எனர்ஜி, உற்பத்தி, விலை, விநியோகம், உதிரிப்பாகங்கள் உற்பத்தி, உதிரிப்பாகங்கள் கொள்முதல் வழித்தடம் ஆகிய அனைத்தையும் மேம்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகச் சீன மக்கள் மத்தியில் BYD மீதான நம்பிக்கை அதிகரித்து விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதேவேளையில் டெஸ்லா நிறுவனத்தின் சீன அரசு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாகச் சமீபத்தில் வெளியான அறிவிப்பு சீன மக்கள் மத்தியில் டெஸ்லா மீதான சந்தேகத்தை அதிகரித்தும், மதிப்பைக் குறைத்தும் உள்ளது.

டெஸ்லா நிறுவனத்திற்கு ஏற்கனவே அமெரிக்காவில் போர்டு, ரிவியன் ஆகிய நிறுவனங்களும், ஐரோப்பாவில் வோக்ஸ்வேகன் நிறுவனமும், தென் ஆசிய சந்தையில் கியா, ஹூண்டாய் ஆகியவற்றும் போட்டியாக இருக்கும் நிலையிலும் முதன்மையாக இருக்கிறது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


No comments