ஜனாதிபதி தெரிவில் இந்திய .அமெரிக்க உளவு அமைப்புக்கள்ஜனாதிபதி  தெரிவில் இந்திய அமெரிக்க உளவு அமைப்புக்கள் முனைப்பு காண்பித்துவருகின்ற நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அவர் ஜனாதிபதி தெரிவின்போது நடுநிலை வகிக்கப்போவதாகவும், தீர்மானம் மாறக்கூடும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே இன்று அவர் ரணிலுக்கு வாக்களிப்போவதாக அறிவித்துள்ளார்.

அதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வாக்களிப்பை புறக்கணிப்போவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை தேசிய காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

No comments