யார் ஜனாதிபதி?


ஆரம்பமானது ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு முதலாவது வாக்கை அளித்தார்   சபாநாயகர் மகிந்த யாப்பு அபேவர்த்தன.

பாராளுமன்றத்தில் தற்போது ஜனாதிபதித் தெரிவுக்கான இரகசிய வாக்களிப்பு நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த வாக்களிப்பில் கலந்துகொண்ட துஷார இந்துநில், வாக்குச்சீட்டை தன்னுடை பக்கத்தைச் சேர்ந்தவர்கள் மறைவாக காண்பித்தார். அத்துடன், வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்னர். அதனை விரித்தும், தூக்கியும் காண்பித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. அதன்பின்னர், பாராளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர், வாக்களிப்​பின் போது, முன்மாதிரியாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இடையில் குறுக்கு கேள்விகளை கேட்பதற்கும், விவாதம் நடத்தவும் முடியாது என அறிவுறுத்திய சபாநாயகர், தங்களுடைய கையடக்க தொலைப்​பேசியின் ஊடாக, வாக்குச்சீட்டை படம்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு படம்பிடித்தால் அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதேபோல வாக்களிக்கும் போதும் கையடக்க தொலைபேசியை எடுத்துவருவது தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.



No comments