ஜீஎஸ்பி பிளஸ் உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி செயற்படும் என எதிர்பார்ப்பார்க்கிறோம் - ஐ.ஒ


அமைதியான போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உட்பட மேலும் சில விடயங்கள் காட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியினூடாக மனித உரிமைகளையும் சட்டவாட்சியையும் பாதுகாப்பது இன்றியமையாதது என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க இலங்கை பாராளுமன்றம் துரிய நடவடிக்கை எடுத்ததைப் போல், இலங்கை மக்களின் கருத்து சுதந்திரம், தனிப்பட்ட உரிமைகளை  ஜனநாயக ரீதியிலும் அமைதியான முறையிலும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இலங்கையின் புதிய அரசாங்கம் அதன் ஜீஎஸ்பி பிளஸ் உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி செயற்படும் என எதிர்பார்ப்பதாக கடுமையான தொனியில் சுட்டிக்காட்டியுள்ளது.

2017இல் மீண்டும்  அறிமுகப்படுத்தப்பட்ட ஜீஎஸ்பி பிளஸ் சலுகை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது என்றும் 70 மில்லியன் யூரோ பெறுமதியான ஒத்துழைப்புத் திட்டங்கள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு ஆதரவான அனைத்து முயற்சிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments