ரணில்-மகிந்த விசேடத்தில் நனைந்த கூட்டமைப்பினர்!



ஜனாதிபதி தெரிவின் போது வாக்களிக்க  மகிந்த-ரணில் கூட்டு அள்ளி வழங்கிய விசேடத்தினில் ஜயக்கியமாகியவர்களுள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் தாம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரவிரவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரித்தனர் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் நான்கு அல்லது ஐவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக்கூடும் எனவும் ஹரீன் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ் ஜனாதிபதி வாக்கெடுப்பில் டலஸ் 120 வாக்குகளுக்கு மேல் பெறுவார் என சஜித், டலஸ் அணிகள் கூறிவந்த நிலையில் பல எம்பிகள் அந்தர் பல்டி அடித்து ரணிலுக்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடதக்கது.

No comments