நாச்சிக்குடாவில் தமிழக மீனவர்கள் கைது!

 


ஒருபுறம் இலங்கையிலிருந்து தப்பித்து இந்தியா செல்பவர்களது எண்ணிக்கை திகரத்து செல்கின்ற நிலையில்தலைமன்னார் – நாச்சிக்குடா கடற்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு குறித்த பகுதியில் 2 படகுகளில் 11 மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, இரண்டு படகுகளை கடற்படையினர் தடுத்ததுடன், அதில் ஒரு படகில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த படகில் இருந்த 5 இந்திய மீனவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதுடன், ஏனைய 6 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதானவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments