"கோட்டா கோ கம "காரர்களை கள்வர்களாக்கும் ரணில்!இலங்கையின் ஜனாதிபதி மாளிகையில் நடமாடியவர்களை திருடர்காளக்க ரணில் அரசு மும்முரமாகியுள்ளது.

ஜனாதிபதி மாளிகையின் ஜன்னல் திரைகளில் இருந்து திருடப்பட்ட தங்க நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட 40 பித்தளை உருண்டைகளை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று பேர் நேற்று (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

28, 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள் ராஜகிரிய - ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் வெலிக்கடையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதி மாளிகை தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments