அமைச்சு பதவிகள் வேண்டாம்:சஜித்! ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுக்களின் ஊடாக அரசாங்கத்தில் பங்கு வகிக்க தயாராக இருப்பதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பாராளுமன்றக் குழுக்களின் மூலம் அரசாங்கத்தில் பங்கு வகிக்கத் தயாராக உள்ளோம், ஆனால் அமைச்சுப் பதவிகளை ஏற்க விரும்பவில்லை. அரசாங்கத்தில் பங்கு வகிப்பதற்கான சரியான வழி, பாராளுமன்றக் குழுக்களில் பங்கேற்பதே தவிர, அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு சலுகைகளை அனுபவிப்பது இல்லை” என்று சஜித் பிரேமதாச தொழிற்சங்கத் தலைவர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புகள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பொதுவான வேலைத்திட்டம் தொடர்பில் புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களை ஒன்றிணைத்து தேசிய சபையொன்றை அமைக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments