பீரிஸ் நட்டாற்றில்!

கோத்தா அரசை சர்வதேசத்தில் காப்பாற்ற அலைந்த ஜி.எல்.பிரீஸ் நடுவீதியில் விடப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்வதற்காக நடைபெறும் போட்டியில் ஜி.எல். பீரிஸ் ,டலஸ் அழகப்பெரும கட்சியில் அங்கம் வகிப்பதால் அவருக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

எவ்வாறாயினும், பஸில் தரப்பின் அழுத்தங்கள் காரணமாக பொதுஜன பெரமுன தனது கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரை முன்வைக்காமல், சம்பந்தப்பட்ட தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் தனது சகபாடிகள் சகிதம் டலஸை ஆதரிக்க பீரிஸ் முற்பட்டுள்ள நிலையில் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படவுள்ளார். 


No comments