இலங்கை இரண்டாகியது தெரிகின்றது!



மக்கள் எழுச்சி முழு நாட்டுக்கும் உரியது அல்ல. ஒன்பதாம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது “முழு நாடும் கொழும்புக்கு” என்று ஒரு கவர்ச்சியான சுலோகம் முன்வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் ஆய்வாளர் நிலாந்தன்.  

ஆனால் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்து 30-க்கும் குறையாதவர்கள்தான் சைக்கிளில் ஊர்வலம் போனார்கள். நகரப் பகுதியில் கிட்டத்தட்ட 100 பேர்தான் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினார்கள். கிழக்கிலும் நிலைமை அப்படித்தான். வடக்கு கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்திற்கு என்று போகவில்லை. தூரமும் போக்குவரத்து நெருக்கடியும் காரணங்களாக கூறப்படலாம். யாழ்ப்பாணத்தில் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்த கட்சிகள் பெருமளவுக்கு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவை.தமிழ்த் தேசிய  நிலைபாட்டைக் கொண்ட காட்சிகள் இதில் இணையவில்லை.நேற்றைய ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்குக்கிழக்கில் பெருந்திரளான ஆதரவு கிடைக்கவில்லை.

இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் முன்னப்பொழுதும் பெற்றிராத ஒரு மகத்தான வெற்றியை பொதுமக்கள் பெற்றிருக்கிறார்கள்.அந்த வெற்றிக்காக நாடு முழுவதையும் கொழும்புக்கு  வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள்.ஆனால் வடக்கு கிழக்கில் இருந்து பெருந்தொகையானவர்கள் கொழும்புக்குப் போகவில்லை.இது எதைக்  காட்டுகிறது? இலங்கைத்தீவு இப்பொழுதும் இப்பொழுதும் இரண்டாகப் பிரிந்து  நிற்கிறது என்பதைத்தானே? இலங்கைத் தீவில் இப்பொழுதும் இரு வேறு கருத்து நிலைகளைக் கொண்ட மக்கள் கூட்டங்கள் வசிக்கின்றன என்பதைத்தானே என கேள்வி எழுப்பியுள்ளார் ஆய்வாளர் நிலாந்தன். 

No comments