தட்டுப்பாடு இல்லை:ஹெகலிய?

 


வெளியே பிரச்சாரப்படுத்தப்படுவது போல வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், எவ்வித பிரச்சனையும் இன்றி மருந்துகளை வழங்க முடியும் எனவும்,; சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

ஆனால் வைத்தியசாலைகளில் நடைமுறையில் உள்ள நிலைமை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும் நோயாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு மருந்துகளை மருந்தகங்கள் வழங்குவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னர் ஒரு மாத காலத்திற்கு வழங்கப்பட்ட மருந்துகள் தற்போது இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக வெளியில் இருந்து கொள்வனவு செய்யுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் நிதி, போக்குவரத்து மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிலவரப்படி மருந்துகளின் விலை மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளது.


No comments