விலகுவதா?இல்லையா? புதன் முடிவு-ஜேவிபி!



இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு தாக்கலில் இருந்து இறுதி நேரத்தில் விலகப் போவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவிவரும் செய்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க கருத்து வௌியிட்டுள்ளார்.

எதிர்கால அதிகார திட்டங்களுடன் தொடர்பில்லாத இருவரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்தால் உருவாக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தின் அதிகாரங்களை கூட பொறுப்பேற்க தயாராக இருப்பதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

“எதிர்கால அதிகார திட்டங்களுடன் தொடர்பில்லாத இருவரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், வரும் அனைத்து கட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது மட்டுமின்றி, அனைத்து கட்சி அரசில் பொறுப்புக்களை ஏற்கவும் தயாராக உள்ளோம். அப்படியானால் வேட்புமனுவை வாபஸ் பெற தயாராக உள்ளோம். இது புதன்கிழமை வரை செல்லுபடியாகும். ஆனால் அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படாவிட்டால் நான் போட்டியிடுவேன். திரும்பப் பெறப்பட மாட்டாது” என்றார்.

No comments