ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும் - இலங்கை திருச்சபை


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை உடனடியாக பதவி விலகுமாறும் இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறக்கூடிய உண்மையான பிரதிநிதித்துவ இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குமாறும் இலங்கைத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்நச் சபை அறிக்கையொன்றை விடுத்துள்ளது. 

குறித்த அறிக்கையில், இந்த நாட்டை திவாலான நிலைக்கு கொண்டு சென்றதற்கு ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒரு பதவிக்காலம் சட்டபூர்வமானதாக இருக்கும் என்றும் மதத் தலைவர்களிடமிருந்தும் சிவில் சமூகத்தினரிடமும் தெருவில் இருக்கும் சராசரி ஆணும் பெண்ணும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பெரும் அழைப்பை விடுக்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இனி இந்த நாட்டை ஆள்வதற்கு அவருக்கு எந்த ஆணையும் இல்லை என்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments