டலஸ் வெற்றிக்கம்பை அண்மித்தார்2015ம் ஆண்டு மகிந்தவை கவிழ்க்க பின்னப்பட்ட சதிகளில் முக்கிய சூத்திரதாரியான ரணிலை கவிழ்க்க தற்போது அதே சதிகள் பின்னப்படுகின்றது.

நாளைய ஜனாதிபதி தெரிவில் பொதுஜனபெரமுன சார்பில் களமிறங்கும் ரணிலுக்கு எதிராக அதே கட்சியிலிருந்து டலஸ் இறக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் ரணிலின் முன்னாள் சகபாடிகளான மனோ கணேசன் தரப்பு முதல் சஜித் தரப்பு மற்றும் முஸ்லீம் தரப்பென அனைத்து தரப்புக்களும் டலஸ் பக்கம் சாய்ந்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.  கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments