மீண்டும் கொடி கட்டும் பாலியல் தொழில்!இலங்கையில் யுத்த காலத்தை ஒத்ததாக மீண்டும் பாலியல் தொழில் முனைப்படைந்துள்ளது.

ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படல் உள்ளிட்ட தொழில் இழப்பினாலும் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடிகளாலும் யுவதிகள் பாலியல் தொழிலிற்கு தள்ளப்பட்டுவருகின்றனர்.

இதனிடையே பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றம் இவர்களுள் பலர்  தமது வாழ்வாதாரத்துக்காக பாலியல்  தொழில்களை நாடுவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka  என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற்றுரை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் தொழில்வாய்ப்பை இழக்கும் பெண்கள் மசாஜ் நிலையங்களுக்கு தொழிலுக்கு செல்வதுடன் பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுவதாகவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.


No comments