பத்தித்துறையில் பதுங்கியிருந்தோர் கைது!

 


அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முயன்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் ஓர் வீட்டில் தங்கியிருந்த சமயமே இவ்வாறு இன்று அதிகாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 12 பேரும் தங்கியிருந்த வீட்டில் அந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவர் தங்கியிருந்தபோதும் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்படவில்லை.

கைது செய்யப்பட்ட 12 பேரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப கட்ட விசாரணைகள் இடம்பெறுகின்றன.

No comments