பிரெஞ்சு தேர்தல்: மக்ரோனின் கட்சி பெரும்பான்மையை இழந்தது!


பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றபோதும், அக்கட்சி நாடாளுமன்றில் பெரும்பாண்மையை இழந்தது.

பிரான்சில் நாடு தழுவிய ரீதியில் நாடாளுமன்றடத் தேர்தல் வாக்களிப்பின் இரண்டாவது  கட்டம் நடந்தது. தோ்தல் முடிவுகள் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

577 இருக்கைகளைக்கொண்ட நாடாளுமன்றில் பெரும்பாண்மைக்கு 289 இடங்கள் தேவையான போதும், மக்ரோனின் மையவாத கட்சியின் கூட்டணி 245 இடங்களில் பெற்றி பெற்றது.

இடதுசாரிக் கூட்டணி என்யூபிஈஎஸ் (NUPES) ஜோன் - லூக் மெலன்சோனுக்குப் பின்னால் ஒன்றுபட்டது. அக்கட்சி தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது.

தீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென்னின் தேசிய பேரணிக் கட்சி (National Rally party) 10 மடங்கு அதிகரிப்பு பெற்றது. நாடாளுமன்றத்திற்கு 89 சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

44 வயதான மக்ரோன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதியாகவும் முக்கிய பங்கை வகிக்க முற்படுகையில், உள்நாட்டு பிரச்சனைகளால் திசைதிருப்பப்படும் அபாயமும் உள்ளது.

வரிக் குறைப்புக்கள், நலன்புரி சீர்திருத்தம் மற்றும் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது உட்பட, மக்ரோனின் இரண்டாம் கால தேர்தல் கால  வாக்குறுதிகளை அவரால் நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்த நிலைமை நம் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்தார்.

No comments