எதியோப்பியாவில் 200 மேற்பட்ட அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பலி!


எதியோப்பியாவில் ஒரோமியாப் பகுதியில் நடந்த மோதலில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் அம்ஹாரா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

தாக்குதல் சம்பவத்தின்போது சாட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் படி:

சமீபத்திய காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இத்தாக்குதலுக்கு ஒரோமா லிபரேசன் இராணுவம் Oromo Liberation Army (OLA)  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதேநேரம் அத்தாக்குதலில் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லபட்டதாக தாக்குதலில் தப்பிய இரு சாட்சிகள் தெரிவித்தன.

அதில் ஒருவர் தெரிவிக்கையில்:

நான் 230 உடல்களை எண்ணிவிட்டேன். எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்த பொதுமக்களுக்கு எதிரான மிகக் கொடிய தாக்குதல் இது என்று நினைக்கிறேன். இதைப் பார்த்து நான் பயப்படுகிறேன் என்று கிம்பி கவுண்டியில் வசிக்கும் அப்துல்-செய்ட் தாஹிர் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களை நாங்கள் பொதுவான புதைகுழியில் புதைக்கிறோம். நாங்கள் இன்னும் உடல்களைச் சேகரித்து வருகிறோம்.

சம்பவ இடத்திற்கு ஃபெடரல் இராணுவப் பிரிவுகள் இப்போது வந்துள்ளன என்றார்.

இரண்டாவது சாட்சி தெரிவிக்கையில்:

மக்கள் தங்களின் பாதுகாப்புக்குப் பயந்து உள்ளனர். இன்னொரு மக்கள் படுகொலைகள் நடக்கலாம் என அஞ்சுகின்றனர். அதற்கு முன் அங்கிருந்து இடம்பெய வேண்டும் என தீவிரமாக முயன்று வருகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு முன் மீள்குடியேற்றம் என்ற பெயரில் குடியேறிய அம்ஹாரா இனத்தவர்கள் தற்போது கோழிகளைப் போலக் கொல்லப்படுகின்றனர் என்று ஷாம்பெல் என்ற இரண்டாவது சாட்சிதாரர் தெரிவித்தார்.

ஒரோமியாவில் உள்ள பிராந்திய அரசாங்கம் தாக்குதலை உறுதிப்படுத்தியது. ஆனால் உயிரிழப்பு புள்ளிவிவரங்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை. அடிஸ் அபாபாவில் உள்ள மத்திய அரசிடம் கருத்துக் கேட்க முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments