உணவை ஏவுகணையாகப் பயன்படுத்துகிறது ரஷ்யா - ஐரோப்பிய ஒன்றியம்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் குற்றம் சாட்டியதை அடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இருந்து ரஷ்யாவின் ஐ.நா தூதர் வசிலி நெபென்சியா வெளியேறினார்.

ரஷ்ய தூதர் வசிலி நெபென்சியா, திரு மைக்கேல் பொய்களை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

வளரும் நாடுகளுக்கு எதிராக உணவுப் பொருட்களை ஏவுகணையாக ரஷ்யா பயன்படுத்துகிறது. மக்களை வறுமையில் தள்ளுகிறது என்று நியூயார்க்கில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது  ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் கூறினார்.

போரினால் உக்ரைன் துறைமுகங்களில் உணவு தேங்கியுள்ளது. உக்ரைன் சமையல் எண்ணெய் மற்றும் சோளம் மற்றும் கோதுமை போன்ற தானியங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.  ரஷ்யாவும் அதிக அளவு தானியங்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்கிறது.  இந்த ஏற்றுமதி இல்லாததால் மாற்றுப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் போரின் வியத்தகு விளைவுகள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. மேலும் இது உணவு விலைகளை உயர்த்துகிறது, மக்களை வறுமையில் தள்ளுகிறது மற்றும் முழு பிராந்தியங்களையும் சீர்குலைக்கிறது.

 இந்த உணவு நெருக்கடிக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு என்றார்.

ரஷ்யாவால் அமல்படுத்தப்பட்ட கடற்படை முற்றுகையின் காரணமாக உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் சிக்கிய மில்லியன் கணக்கான தொன் தானியங்களை தானே பார்த்ததாக அவர் கூறினார்.

No comments