இலங்கை:நான்கு நாளில் ஜந்து கொலை!கொழும்பின் மோதர, ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத இருவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் கொழும்பு, அளுத் மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கடந்த 4 நாட்களில் அழுத்கதம், தங்காலை, கொழும்பு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

No comments