பெண்கள் பயணித்த உந்துருளி மீதி மோதித்தள்ளிய சிற்றூர்தி


யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த இரு பெண்களை வேகமாக வந்த ஹயஸ் ரக சிற்றூர்தி மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் சிற்றூர்த்தியில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் , மார்ட்டின் வீதி சந்திக்கு அருகாமையில் நேற்று (15) புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

காயமடைந்த இரு பெண்களையும் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments