மட்டக்களப்பு ஏறாவூர் ஆற்றில் மீனவரின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஏறாவூர் மயிலம்பாவெளி துரைச்சாமி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறீதரன் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான  நேற்று புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி மீன்பிடிப்பதற்காக குறித்த ஆற்றில் தோணியில் தனியாக சென்றார்.

இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து  உறவினர்கள் அவரை தேடிய நிலையில், இன்று வியாழக்கிழமை காலையில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

No comments