அதிகாலையில் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காந்திருந்த யாழ் மக்கள்


யாழ்ப்பாணத்தில் பெற்றலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று செல்கின்றனர். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என பொற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்றைய தினம்    அறிவித்திருந்தது. 

அதனை அடுத்து இன்றைய தினம் அதிகாலை 4 மணி தொடக்கம் பெற்றோலை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்தனர். 

அதன் போது , அனைவருக்கும் கிடைக்க பெற்ற பெற்றோலை பகிர்ந்தளிக்கும் முகமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 1,000 ரூபாய்க்கே பெற்றோலை விநியோகித்தார். 

அதனால் பல மணி நேர காத்திருப்பின் பின்னரும் 2.38 லீட்டர் பெற்றோலையே பெற முடிந்துள்ளது. 


No comments