உக்ரைனுக்காகப் போரிட்ட இரு பிரித்தானியர் மரண தண்டனை


கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடிய பிரித்தானியக் குடிமக்கள் இருவர் மற்றும் மொரோக்கோ குடிமகன் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் சுயமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நீதிமன்றம், அதிகாரத்தை வன்முறையில் கவிழ்க்க முயற்சித்ததற்காக மூன்று பேரும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்தது.

இது அங்கீகரிக்கப்படாத நாட்டின் மரண தண்டனைக்குரிய குற்றமாகும். 

அவர்கள் கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றிற்காகவும் தண்டிக்கப்பட்டனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஐடன் அஸ்லின், ஷான் பின்னர் மற்றும் சவுடுன் பிராஹிம் ஆகியோர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

கூலிப்படையினர் என்ற முறையில், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான பாதுகாப்புக்கு மற்றும் உரிமைகள் இல்லை என்று பிரிவினைவாதிகள் கூறியுள்ளனர்.

No comments