யேர்மனியில் ஜி-7 மாநாடை புறக்கணிக்க கோரிய மக்கள் பேரணி

யேர்மனியின் முனிச் நகரில், ஜி 7 மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று பேரணியாக சென்றனர்.

ஜி 7 கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றும், காலநிலை மாற்றத்தை பாதுகாக்க வேண்டும் எனக்கோரியும் பதாகைகளை ஏந்தி பலர் பேரணியாக சென்றனர்.

பாதுகாப்பு முன்னேற்பாடாக மாநாடு நடைபெறும் இடம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


No comments